குஷியோதெரபி

bookmark

1. "கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சு." 

"ஏன்?"

"விளம்பரத்துக்கு கீழே அனைத்தும் கற்பனையேன்னு எழுதிட்டாரு."

2. "அதோ வராறே... அவர் வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்களை பார்த்தவர்!"

"அப்படியா! அவர் என்ன பண்றார்?"

"லாரி ஓட்டுகிறார்...!"

3. "டாக்டர் எதை பார்த்தாலும் ரெண்டு, ரெண்டா தெரியுது!"

"சரி, அந்த பெட்டுல போய் படுங்க..."

"அங்க ரெண்டு பெட் இருக்கே... எதுல டாக்டர் படுக்கறது?"

4. "என்னது... மன்னர் குஷியோ குஷியா இருக்காரு?"

"பின்னே இருக்காதா... தினமும் அந்தப்புரத்துல "குஷியோதெரபி" எடுக்கறாரே!"

5. "தலைவர் ரத்த தானம் செய்யற நேரத்துல, மகளிர் அணியினர் வந்துட்டாங்க..."

"அப்புறம் என்ன... தலைவர் அவங்களுக்கு முத்த தானம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு!"