குழந்தை டாக்டர்
"ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?"
"பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்."
கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா...?
மனைவி: இல்லே... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார்....
"ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?"
"பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க."
"சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துக்கிட்டது தப்பாப் போச்சு..
"ஏன்?
"படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..."
"போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு...."
"அதுக்கென்ன....?"
"குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டுவேன்னு ஒரே தகராறு பண்றாரு..."
