குழந்தைகள்

குழந்தைகள்

bookmark

இன்றைய குழந்தைகள் நாளைய மனிதன்.

சிறுவர்கள் எல்லாம் பெரியவர்கள் ஆவர்.

(அ) மலடிக்கு வருமா மழலைமேல் அன்பு (ஆ) பிள்ளை பெறாதவனுக்கு அன்பு தெரியாது.

மழலைச்செல்வமே ஏழையின் செல்வம்.

மனைவி வரும்வரையே மகன் வாழ்நாள் எல்லாம் மகள்.

குழந்தைக்கும் முட்டாளுக்கும் பொய் சொல்லத் தெரியாது.

குழந்தைகளைக் கேட்டறிவதிலும் பார்த்தறிவதே மேல்.

எலும்புந் தோலுமாய்க் குழந்தையை வளர்க்காதே.

குழந்தையும் கோழிக்குஞ்சும் எப்போதும் பொறுக்கும்.

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

குழந்தையின் மீது எதையும் திணிக்காதே அதுவாகப் பற்றம்படி அறிவு கொளுத்து.

ஒவ்வொருவரும் தன் கடந்த காலத்தின் குழந்தையே, (அ) காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு (ஆ) எல்லாத் தாய்க்கும் தன் குழந்தையே அழகு.