காலில் சுத்தின பாம்பு

bookmark

காலில் சுத்தின பாம்பு கடிக்குமா, கடிக்காதா?
ஏன் கேட்கிற?
"உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கே"ன்னு கேட்டேன்..!

ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?
திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு, என் மாமியார் படத்தை மாட்டி வெச்சிருந்தேன்.

தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?
ஏன்?
டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.

தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...!