காலண்டர்
1. "என்ன இது... நம்ம தலைவர்கிட்ட இவ்வளவு மனுக்கள் குவிஞ்சிருக்கு?"
"அட நீ ஒண்ணு... அதெல்லாம் அவரோட சின்ன வீடுங்க அனுப்பியிருக்கற விவாகாரத்து நோட்டீஸ்கள்!"
2. "மாப்பிள்ளை ஏன் மணமேடையிலிருந்து எழுந்திருக்கும் போதெல்லாம், மனையில துண்டு போட்டுட்டுப் போறாரு...?"
"பொண்ணோட பழைய காதலர்கள் மூணு பேரு கல்யாணத்துக்கு வந்திருக்காங்களாம்...!"
3. "எங்கள் மன்னரை எதிர்த்துப் போரிட வரும் எதிரிகள் நிலை தடுமாறிடுவாங்க..."
"அவ்வளவு ஆக்ரோஷமா சண்டை போடுவாரா..?"
"இல்ல... எந்தப் பக்கமா வந்து, திடீர்னு பாய்ந்து கால்ல விழுந்து மன்னிப்பு கேட்பார்னே கணிக்க முடியாது!"
4. "எந்த நகை கேட்டாலும் வாங்கிக் குடுக்கற என் அப்பா, உங்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் குடுக்க மட்டும் ஏன் தயங்கறார்னு புரியலையே?"
"கவரிங் ஸ்கூட்டர் கிடைக்காதே.... அதனாலயா இருக்கும்!"
5. "டாக்டர்... எனக்கு நீங்க தந்த காலண்டர் மார்ச் 25 வரைதான் இருக்கு! அவருக்குத் தந்தது பிப்ரவரி 25 வரைக்கும்தான் இருக்கு!"
"உங்களுக்கு மார்ச் 25 ஆபரேஷன்; இவருக்கு பிப்ரவரி 25ம் தேதி ஆபரேஷன் மறந்துட்டீங்களா?"
