கார்முகப் படலம் - 809

bookmark

809.    

‘ “பூண் இயல் மொய்ம்பினன்.
   புனிதன் எய்த வில்
காணிய வந்தனன்”
   என்ன. காவலன்
ஆணையின் அடைந்த வில்
   அதனை. ஆண்தகை.
நாண் இனிது ஏற்றினான்;
   நடுங்கிற்று உம்பரே!
 
பூண்    இயல் - வாகு வலயங்களை அணிந்த;  மொய்ம்பினன் -
தோள்களையுடைய  அக்குமாரன்;  புனிதன் எய்த வில் -  புனிதனான
சிவன்  கைக்கொண்டு  எய்த  வில்லை;  காணிய வந்தனன் - காணும்
பொருட்டு  வந்துள்ளான்; என்ன - என்று (விசுவாமித்திரன்)   சொல்ல;
காவலன்  ஆணையின்  - சனக ராசனின் கட்டளையால்; அடைந்த -
அங்கு  வந்து  சேர்ந்த;  வில் அதனை - அந்த வில்லை  (வளைத்து);
ஆண்  தகை  -  ஆண்மையுள்ளவனான அக்குமாரன்;  இனிது நாண்
ஏற்றினான் - மிக  எளிதாக  நாணேற்றினான்;  உம்பர் நடுங்கிற்று -
வானுலகும் நடுங்கியது.

மொய்ம்பு  - வலிமை வலிமை;கொண்ட தோளுக்காயிற்று. ‘பூந்தாது
மொய்ம்பினவாக’- கலித். 88.                                60