காதல் கல்யாணம்
ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம்
"விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும்."
ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது"
தலைவர் சொன்னார். "கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!"
போலீஸ்: எப்படி விபத்து நடந்தது?
டிரைவர்: அதுதான் எனக்கும் புரியல.. நான் தூங்கிட்டுல இருந்தேன் அப்புறம் எப்படி எனக்குத் தெரியும்?"
"காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?"
"பின்ன, பால்கடை வாசல்ல 'இங்கு சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்'னு எழுதியிருக்காங்களே!"
மகன்: (தந்தையிடம்)நீ காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிண்டே...என் காதலை மட்டும் எதிர்க்கிறியே ஏன்?
தந்தை: அதனால்தாண்டா எதிர்க்கிறேன்..
"அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?"
"ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?"
"அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே."
