காட்டிற்கு வெளியே
யானைக்கு பயந்து ஓடிய நான் காட்டை விட்டு வெளியே வந்திருப்பேன் என்று முழுமையாக நம்பினார்கள் . என்னைத் தேடி வந்தவர்கள் காட்டிற்குள் நுழையாமல் காட்டின் எல்லையில் இருக்கும் மரங்களுக்கு அருகிலேயே நின்று கொண்டார்கள்.
டார்ச் அடித்து சுற்றும் முற்றும் தேடினார்கள். என் பெயரை இரண்டு முறை கத்த, தூரத்தில் யாரோ சைக்கிளை அழுத்த முடியாமல் அழுத்திக் கொண்டு வருவது போல க்ரீச் க்ரீச் என்ற ஒலி கேட்டது.
சட்டேன்று நால்வரும் சைக்களை நோக்கி டார்ச் அடித்தனர் ஆனால் யார் கண்ணிலும் அந்த சைக்கிளை ஓட்டி வந்தவர் சிக்கவில்லை.
உள்ளே இருந்த நான் மெல்ல கண் விழித்துப் பார்த்தேன் அந்த பேய் இல்லை நான் மட்டும் தான் தனியாக இருந்தேன். நான் பயந்து கொண்டே அந்த அறையை விட்டு வெளியேற யாரோ பயங்கரமாக சிரிப்பது கேட்டது.
நான் மூச்சிறைக்க மெல்ல சுவற்றை பிடித்துக் கொண்டு நகர்ந்தேன் என்னை தேடி சென்றவர்கள் அந்த இருட்டில் ஒன்றுமே தெரியாமல் எங்கு சென்று தேடுவது என்று கூட புரியாது தவித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த காட்டில் கேட்கும் சின்ன சின்ன சப்தங்கள் கூட அவர்களுக்கு நானாக இருக்குமோ என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
