கள்ள ஓட்டு
போலீஸ் ஸ்டேஷனில் ஒரு திருடன்:
"என்னோட அந்த பழைய போட்டோவை எடுத்துட்டு, இந்த புது போட்டோவை மாட்டிடுங்க சார்!"
"அரசியல்லயும் 'ராகிங்'கா என்னய்யா சொல்றே..?"
"புதுசா கட்சி தொடங்கின தலைவரைப் பார்த்து ஆ.ராசா மாதிரி நடந்து காட்டச் சொன்னாங்களாம்!"
"கல்யாணப் பந்தியில சாப்பிட்டுட்டு, அடுத்த அஞ்சாவது நிமிஷமே மறுபடி சாப்பிட வந்த அந்த ஆளை, தலைவர் ஏன் கட்டிப்பிடிச்சு பாராட்டறார்..?" "அடுத்த தேர்தல்ல கள்ள ஓட்டு போட ஆள் செலக்ட் பண்ணிட்டாராம்..!"
"நம்ம தலைவர் டைரக்ட் பண்ண படம் சென்சார் போர்டைத் தாண்டிருச்சா..?"
"படம் சென்சார் போர்டைத் தாண்டிருச்சு ஆனா, படம் பார்த்த சென்சார் அதிகாரிங்கதான் அபாய கட்டத்தை தாண்டாம இருக்காங்க!
"உங்களுக்கு என்ன பிரச்சினை?"
"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் போடுறப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?"
