கறுப்பு திராட்சை (பன்னீர் திராட்சை)
திராட்சைக்கு இரத்தசோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களை போக்கும் சக்தி உண்டு.
மேலும் தூக்கமின்மைக்கும் ஒரு சிறந்த மருந்தாகிறது இந்த திராட்சைப்பழம்.
உடல் எடை குறைவாக உள்ளவர்கள், உடல் பலவீனமடைந்தவர்கள் திராட்சையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
திராட்சை தாகத்தைத் தணிக்கும் வல்லமை கொண்டது.
கறுப்பு, சிவப்பு நிற திராட்சைகளில் காணப்படும் பையோஃப்ளாவனாய்ட்ஸ் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், உடலை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. சிவப்பு நிற திராட்சைப் பழரசம் இருதயத்திற்கு மிகவும் நல்லது.
கறுப்பு திராட்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
