கப்பலோட்டிய தமிழன்

bookmark

வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்

கப்பலோட்டிய தமிழன் [1944], தளபதி சிதம்பரனார் [1950], கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]

வ.உ.சி சிலை அமைத்தல் :-

1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்:-

ம.பொ.சி எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. இந்நூலை தழுவி பி. ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். கட்டபொம்மன் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

வீரபாண்டிய கட்டபொம்மன் [1949], கயத்தாற்றில் கட்டபொம்மன் [1950], சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950] ஆகியவை ஆகும்.

திருவள்ளுவர்:-

திருவள்ளுவர் பற்றி ம.பொ.சி எழுதிய நூல்கள் பின்வருமாறு:-

வள்ளுவர் வகுத்த வழி [1952], திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960], திருக்குறளில் கலை பற்றிக் கூறாத்தேன்? [1974] போன்றவை ஆகும்.

இராமலிங்க அடிகள்:-

இராமலிங்க அடிகள் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள் பின்வருமாறு:-

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963], வள்ளலாரும் பாரதியும் [1965], வள்ளலார் வளர்த்த தமிழ் [1966], வள்ளலார் வகுத்த வழி [1970], வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970], வானொலியில் வள்ளலார் [1976], வள்ளலாரும் காந்தியடகளும் [1977], வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963] போன்றவை ஆகும்.

ம.பொ.சி எழுதிய ஆங்கில நூல்கள் :-

The Great Patriot V.O. Chidambaram Pillai, The First Patriot Veera Pandia Katta Bomman, The Universal Vision of Saint Ramalinga இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

ம. பொ. சி அவர்களின் சிறப்புகள் :-

சிலம்புச் செல்வர்' என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப் பெற்றது.

சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.

மதுரைப் பல்கலைக் கழகம் 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.

மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.

தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார்.

'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.

தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார்.

சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராக பணியாற்றினார்.