கதை டிஸ்கஷன்
"டாக்டர்! நான் ஒரு அனாதைங்கறது உங்களுக்குத் தெரியுமா...?"
"ஏன் தெரியாது.... உங்க குடும்பத்தில் எல்லோருக்கும் நான் தானே ஆபரேஷன் பண்ணினேன்....!"
"டார்லிங்... என்னை மன்னிச்சிடுங்க! என்னை மறந்துடுங்க! எனக்கு வேற ஒரு பையனோட கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சு..."
"எனக்குத் தெரியும்!"
"எப்படி..?"
"இனிமே நம்ம காதலுக்கு எங்க அக்கா இடைஞ்சலா இருக்க மாட்டான்னு உன் தங்கச்சி ஏற்கனவே சொல்லிட்டா...!"
"கதை டிஸ்கஷனுக்கு ஏன் வேலைக்காரிகளை வேன்ல கூட்டிக்கிட்டுப் போறீங்க...?"
"அவங்களுக்குத்தானே ஊர்க் கதைகளை தத்ரூபமா சொல்ல வரும்...!"
நீதிபதி: "நீ செஞ்ச திருட்டுக்கு என்ன தண்டனை தெரியுமா?"
குற்றவாளி: "நான் என் திருட்டு தொழில்ல ராஜினாமா பண்ணிடறேன் எசமான்!"
நீதிபதி: "என்ன சொல்றே?"
குற்றவாளி: "என்ன எசமான், எல்லாரும் தப்பு செஞ்சா, ராஜினாமாதானே செய்றாங்க!"
"நம்ம தலைவருக்கு சின்ன வீடுன்னாலே பிடிக்காதுப்பா."
"பரவாயில்லையே நல்ல மனுஷனாயிருக்காரே..."
"நீ வேறப்பா... தன்னோட சின்ன வீட்டுக்குக் கூட பெரிய வீடா தான் கட்டிக் கொடுத்திருக்காருன்னா பாரேன்."
