கடிகை முத்துப் புலவர்

bookmark

வாழ்க்கை வரலாறு

கடிகைமுத்துப் புலவர் உமறுப் புலவர் பெருமானுக்கு ஆசிரியராக விளங்கியவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவர் பாடியனவாக 246 பாடல்கள் உள்ளன. அவை மடக்கு, பின்முடுகு வெண்பா வெண்டுறை, முன்முடுகு வெண்பா, விருத்தம், கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கொச்சகம் முதலான யாப்பமைதிகளைக் கொண்டவை. இவை வெங்கடேசு ரெட்டன் (வெங்கடேசு ரெட்டமன்) என்பவன்மீது பாடப்பட்டவை. தலைவி ஒருத்தி வெங்கடேசு ரெட்டமன் மீது காதல் கொண்டு பாடுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.