கங்கைப் படலம் - 2072
2072.
‘ஐ - இருபத்தோடு ஐந்து
ஆயிரர் உளர், ஆணை
செய்குநர், சிலை வேடர் -
தேவரின் வலியாரால்;
உய்கதம் அடியேம் - எம்
குடிலிடை, ஒரு நாள், நீ
வைகுதிஎனின் - மேல் ஓர்
வாழ்வு இலை பிறிது’ என்றான்.
‘ஆணைசெய்குநர்- நான் இட்ட கட்டளையை நிறைவேற்றுபவராகிய;
தேவரின்வலியார்- தேவர்களைக் காட்டிலும்வலிமை படைத்தவர்களாகிய;
சிலைவேடர் -வில் ஏந்திய வேடர்கள்; ஐஇருபத்தோடு ஐந்து ஆயிரர்
உளர் - ஐந்து இலக்கம் பேர்இருக்கின்றார்கள்;நீஎம் குடிலிடை
ஒருநாள் வைகுதி எனின் - இராமா! நீ எம் குடிசையிடத்துஒருநாள்
தங்குவாயானால்; மேல் ஓர் வாழ்வு பிறிது இலை- எங்களுக்கு
அதைக்காட்டிலும்மேலான வேறொரு வாழ்க்கை இல்லை; உய்குதும்-
நாங்கள் ஈடேறிவிடுவோம்; என்றான்-.
ஐ இருபது - நூறு. அதனோடு ஐந்தைப் பெருக்க ஐந்நூறு ஆயிரவர்
என்று முடியும் ‘நீஎம்......வைகுதி எனின்’ - இரண்டிடத்தும் கூட்டப்பட்டது.
‘ஆல்’ அசை. 31
