கங்கைப் படலம் - 2049
2049.
கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்,
நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன்,
பிச்சராம் அன்ன பேச்சினன், இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான்.
கச்சொடு ஆர்த்த - அரைக்கச்சிலே கட்டிய; கறை கதிர்
வாளினான் -இரத்தக் கறை படிந்துள்ள ஒளிபடைத்த வாளை உடையவன்;
நச்சு அராவின் - விடம்பொருந்திய பாம்பைப் போல; நடுக்குறு
நோக்கினன் - பிறர் நடுக்கம் அடைகின்றகொடிய கண் பார்வை
உடையவன்; பிச்சாரம் அன்ன பேச்சினன் - பித்தர்களைப் போலஒன்றுக்
கொன்ற தொடர்பில்லாமல் பேசக்கூடிய பேச்சினை உடையவன்; இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான் - தேவேந்தி ரனது வச்சிராயுதம்
போல மிகவும் உறுதியான இடுப்பை உடையவன்,
வேடர்கள் என்பதால் தெளிவற்ற பேச்சை உடையவன் என்றார்.
நடுப்பகுதி சிறந்து இரண்டுபக்கமும் பெருத்து இருப்பதனால் வச்சிரப்படை
போலும் இடுப்பு என்றார். 7
