கங்கைப் படலம் - 2027
2027.
எதிர்கொடு ஏத்தினர்; இன் இசை பாடினர்;
வெதிர் கொள் கோலினர், ஆடினர்; வீரனை,
கதிர் கொள் தாமரைக் கண்ணனை, கண்ணினால்,
மதுர வாரி அமுது என, மாந்துவார்.
வெதிர் கொள் கோலினர்- மூங்கிலால் ஆகிய தண்டத்தை உடைய
முனிவர்கள்; வீரனை - இராமனை; கதிர் கொள் தாமரைக் கண்ணனை-
ஒளி படைத்த தாமரைக்கண்களை உடையவனை; கண்ணினால் - தங்கள்
கண்களால்; மதுர வாரி அமுது என -இனிய பாற்கடல் தந்த அமுதம்
போல; மாந்துவார் - உண்டு; எதிர் கொடு -வரவேற்று; ஏத்தினர் -
துதித்து; இன் இசை பாடினர் - இனிய இசை பாடி; ஆடினர் -(ஆனந்தக்
களிப்பால்) ஆடினர்.
மது ரவாரி - பாற்கடல். வெதிர் - மூங்கில் - ஏக தண்டம், திரி
தண்டம் ஏந்துதல்முனிவர் இயல்பு. “முக்கோல் கொள் அந்தணர்” (கலித்.
126:4) என்பது காண்க. 12
