ஓசனிச்சிட்டுகள்
ஓசனிச்சிட்டுகள்
இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் "உசுஉசு " என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர்.
இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது, ஓரிடத்திலேயே நின்றும் பறக்கமுடியும்.
உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகச் சிறிய கூடு இந்த பறவையின் கூடாகும். இதனுடைய கூட்டின் ஆழம் மிகச்சிறியது 3 செ.மீ விட்டமுடையது..
ஓசனிச்சிட்டுகள் இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன.
