ஐ.பி.எல். ஊழல்

bookmark

"அந்த ஆஸ்பத்திரியில பேஷன்ட்டை நல்லா கவனிச்சுப்பாங்களாமே... அப்படியா?"

"ஆமா ஊசி போட ஒரு நர்ஸ், தடவிவிட ஒரு நர்ஸ்னு ரெண்டு பேர் இருக்காங்க...!"

"கிரிக்கெட் விளையாடத் தெரியலைனு ஏன் தலைவர் வருத்தப்படறாரு?"

"தெரிஞ்சிருந்தா ஐ.பி.எல்-ல ஊழல் பண்ணியிருக்கலாமே!"

"உங்க வீட்ல தினமும் மனைவி சமையல்தானா?"

"எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க...?"

"தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க...!"

"டென்ஷனுக்கு மாத்திரை எழுதிக் குடுத்தேனே... அதை ஏன் வாங்கிச் சாப்பிடலை...?

"மாத்திரையோட விலையைக் கேட்டாலே, ஒரே டென்ஷனா வருது டாக்டர்!"


"ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க கணவர் பிழைப்பார்..."

"அப்படின்னா, நானும் என் மாமியாரும் ராசியாகிட்டோம்னு அவர்கிட்ட சொல்லிப்பாருங்க டாக்டர்..!"