எஸ்.எம்.எஸ். புகார்
"நம்ம டாக்டர் பேஷன்ட்களோட மனசை நல்லா புரிஞ்சிக்கிட்டவர்னு எப்படிச் சொல்றே..?"
"ட்ரீட்மென்ட்டுக்கு வரும்போதே, நர்சுங்களோட ஆல்பத்தைக் கையில கொடுத்து, விருப்பமான நர்ஸை செலக்ட் பண்ணிக்கச் சொல்றாரே!"
"எஸ்.எம்.எஸ்.ல புகார் கொடுத்தா ஆக்ஷன் எடுக்கறோம்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன்?"
"கபாலி ஒழுங்கா மாமூலை செட்டில் பண்ண மாட்டேங்கறான்னு நம்ம டிபார்ட்மென்ட்ல இருந்தே நிறைய புகார் வருது!"
"நடிகை ஜல்சாஸ்ரீ முத்தம் கொடுத்து ஓட்டு கேட்டு வர்றாங்களாமே..."
"வேறு எதைக் கொடுத்தாலும் தேர்தல் விதிமுறை மீறல்ன்னு வழக்கு போட்டுடுறாங்களே!"
"இந்த கல்யாணத்தை நடத்தறவங்க உஷார் பார்ட்டிங்கன்னு எப்படிச் சொல்றே?" "மொய் எழுத பணம் கொண்டு வராதவங்களுக்கு கடன் கொடுக்க, சில ஃபைனான்ஸ்காரங்களை ஏற்பாடு பண்ணி மண்டபத்துலயே உக்கார வச்சிருக்காங்களே...!"
"என்னோட சட்டைப் பையிலேர்ந்து பணம் எடுத்தியா?"
"ஆ.ராசா சத்தியமா நான் எடுக்கலை டாடி!"
