எழுச்சிப் படலம் - 827
குடைகளும்-கொடிகளும்
827.
கால் விரிந்து எழு குடை. கணக்கு இல் ஓதிமம்.
பால் விரிந்து. இடை இடை பறப்ப போன்றன;
மேல் விரிந்து எழு கொடிப் படலை. விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால்!
கால் விரிந்து- (அச்சேனைகளின் இடையே பிடிக்கக் கூடிய)
காம்பிலிருந்து விரிந்து; எழுகுடை - எழுந்துள்ள வெண் குடைகள்;
கணக்கு இல் ஓதிமம் - எண்ணில்லாத அன்னப் பறவைகள்; பால்
விரிந்து - பால் போன்ற தம் வெண் சிறகுகளைப் பரப்பி; விண் -
வானத்தில்; பறப்ப- பறப்பன; போன்றன - போன்றன; மேல் விரிந்து
- வானத்தில் விரிந்து; எழு கொடிப் படலை - எழுகின்ற கொடிகளின்
கூட்டம்; விண் எலாம் - விண் முழுவதும்; தோல் உரிந்து - தோல்
உரியப் பெற்று; உகுவன போன்று - சிந்துவன போன்று; தோன்றும்-
தோன்றும்.
சேனைகளின் இடையே பல வெண்ணிறக் குடைகள் பிடிக்கப்
படுபவை. பல அன்னப் பறவைகள் தம்முடைய வெண்மையான
சிறகுகளை விரித்து வானத்தில் பறந்து போவதையும். வெண்கொடி
ஆடுபவை. வானம் தோலுரிக்க அவை அங்கிருந்து
சிந்துவனவற்றையும் ஒத்துள்ளன என்பார். தற்குறிப்பேற்ற அணி. 11
