எல்லோருமே நேர்மை

bookmark

நல்ல விளைச்சல் செய்து காட்டிய உழவனைப் பத்திரிகையாளர், "உன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள் தானா?" என்று கேட்டார்.

"அதில் என்ன சந்தேகம்? எல்லோரும் நேர்மையானவர்கள் தான்" என்று பதில் சொன்னான் உழவன்.

"அப்படியானால் உன் கையில் ஏன் துப்பாக்கி வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார் அவர்.

"எல்லோரும் நேர்மையாக இருப்பதற்குத்தான்" என்று உடனே பதில் சொன்னான் அவன்.