என்ட்ரன்ஸ் எக்ஸாம்
நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது.
கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க?
"இந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டுமா?"
"அது காட்டாது! நாம்தான் பார்க்கவேண்டும்"
"எதுக்கு பசங்க எல்லாரையும் வாசல்ல உட்காரவெச்சு பரீட்சை எழுத விட்டிருக்காங்க?"
"என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!"
சர்வர் சாப்பிட வந்தவரிடம்: என்ன வேணும் சார்?
சாப்பிட வந்தவர்: சூடா என்னப்பா இருக்கு
சர்வர்: தோசைக்கல் சார்.
"சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா?"
"தெரிஞ்சுக்கோங்க...."
"பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்துடும்!"
