எதிரொலி

bookmark

எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது?
எதிரொலி.

பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?
நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே.

ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி அத்தியாயம் பிரிப்பார்?
சாப்பாட்டுக்கு முன்பு - சாப்பாட்டுக்குப் பின்புன்னு! 

வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?
முட்டையிலிருந்து தான்

நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
அதெப்படி?
மழையே பெய்யவில்லையே!