எங்கள் புனிதரைப் போற்றிப் பாட இன்று
எங்கள் புனிதரைப் போற்றிப் பாட இன்று
எங்கள் இதயங்கள் மகிழ்ந்திடுதே
புனிதராம் சார்லஸின் புகழ் பாட நம் மனங்களும் மகிழ்ந்திடுதே
போற்றி போற்றி புனிதரே நீர்
வாழ்க வளர்க உம் புகழே (2)
1. இறைவனின் உன்னத பூங்காவில் - இறை
அரசினை வளர்த்த இனியவனே (2)
இயேசுவின் புகழைக் காத்திடவே
அனைத்தையும் துறந்த புனிதர் இவர் - போற்றி ...
2. பாமரர் ஏழைகள் வாழ்வு பெற - பல
வழிகளை வகுத்திட துணை நின்றார் (2)
செபத்தின் மேன்மையை அனைவருமே
உணர்ந்திட புனிதன் வழி நடப்போம் - போற்றி ...
பீஏ ஞினஞூடுயீ ஹ¾பீசுடி
