உலாவியற் படலம் - 1196

bookmark

1196.

ஏதி யாதவர். ஏழ் திறல் கொங்கணர்.
சேதி ராசர். தெலுங்கர். கருநடர்.
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார்.
 
ஏதி  யாதவர்.   ஏழ்திறல் கொங்கணர்  - ஆயுதங்கள்  ஏந்திய
யாதவ  அரசரும்.  ஏழு  பகுப்பினையுடைய  கொங்கண  அரசர்களும்;
சேதிராசர். தெலுங்கர் கருநடர்  -    சேதி  நாட்டு   மன்னர்களும்.
தெலுங்கு  தேசத்தரசரும்.   கருநாடக   மன்னரும்;   ஆதி   வானம்
கவித்த அவனி வாழ்  சோதி  நீள்முடி  மன்னரும்   துன்னினார்
-  (இவ்வாறு  பஞ்ச   பூதங்களுள்)     முதலாவதான   ஆகாயத்தாற்
சூழப்பட்டுள்ள மண்ணுலகில் வாழும்  ஒளிமிக்க   மகுடங்களையணிந்த
அத்தனை  அரசர்களும் அம்மண்டபத்தில் வந்து நெருங்கினார்கள்.  49