உண்டியல்

bookmark

"தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்கறாரு?"

"அவருக்கு இன்ஸ்பெக்டர் பட்டம் வேணுமாம். அப்பத்தான் மாமூலாவது கிடைக்குமாம்!"

"நான் ஒரு முட்டாள். உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே?"

"அது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்... அதனால தான் சம்மதிச்சேன்...!"

"என் மருமகக்கிட்டே கோயில் மாதிரி வீட்டை வெச்சிக்கணும்னு சென்னது தப்பாப் போச்சு."

"ஏன்? என்னாச்சு...?"

"வாசல்லே ஒரு உண்டியலை வெச்சிட்டா."

திருடன் 1 : டேய், கொள்ளையடிக்கச் சொன்னா, வீட்டுக்காரனை ஏன்டா தலைகீழா தொங்கவிட்டிருக்கே. 

திருடன் 2 : அறிவு கெட்ட முண்டமே, அவனைத் தலைகீழா தொங்க விட்டதினாலே தானே பாக்கெட்லே இருந்த பர்ஸ் கீழே விழுந்துச்சு.

டிராபிக் கான்ஸ்டபிள்: யோவ் நடுரோட்டை விட்டு ஓரமா போய்யா. வண்டிக்காரனுங்க வந்து மோதிடப் போறானுங்க. 

குடிகாரன்: என்னை ஓரமா போகச் சொல்லிட்டு நீங்க மட்டும் நடுரோட்டிலே நின்னா எப்படி.