உடல் தகுதி

bookmark

"தன்னோட கட்சி ஆட்சி அமைக்கும்கிற நம்பிக்கை தலைவருக்கே இல்லைனு எப்படிச் சொல்றே?" 
"'ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம்'னு வாக்கு தர்றாரே!"

"தலைவர் அப்பாவி மாதிரி நடிக்கிறாரே..?"
"ஆமாம்! ஸ்பெக்ட்ரம்னா என்னன்னு கேட்கிறாரே?"

"மகளிர் அணித்தலைவியை உயரம் தாண்டச் சொல்லி ரசிக்கிறாரே... ஏன்?"
"கட்சி தாவறதுக்கு உடல் தகுதி இருக்குதான்னு பார்க்கறார்!"

"இந்தியாப் படம் நல்லாத்தான் வரைஞ்சிருக்கே! அதுக்கு மேலே ஒரு கோடு போட்டிருக்கியே... எதுக்கு?" 
"வறுமைக் கோட்டுக்குக் கீழே தானே இந்தியா இருக்கு?"

"என்ன வேணும் சார்?னு கேட்டிட்டுப் போன சப்ளையர் ஒண்ணும் கொண்டு வரலையே?"
"அட எழவே! அவன் வேலையை விட்டுப் போயி மூணு நாளாச்சே! இன்னுமா இங்கே உக்கார்ந்திருக்கீங்க?"