உடல்நலம்
(அ) நலவாழ்வே நற்செல்வம் (ஆ) உடல்நலம் உயர் செல்வம் (இ) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
உடல்நலமும் உற்சாகமும் ஒன்றை ஒன்று பெற்றுத்தரும்.
உடல்நலமும் புரிந்துகொள்தலும் வாழ்கையின் இரு பெரும் பேறுகள்.
(அ) உடல்நலமே மகிழ்ச்சி (ஆ) ஆரோக்கியமே ஆனந்தம்.
(அ) நோய்வரும் வரை நலத்தில் அக்கறை செலுத்துவதில்லை (ஆ) நோய் வராதவரை உடல் நலத்திற்கு மதிப்பில்லை.
வலிமை வாய்ந்த தலை ஒருபோதும் வலிக்காது.
உடல்நலத்துடன் இருக்கையிலேயே நோய் பற்றிப் படி.
நேரத்தே எழுந்து காலத்தே உண்டு நேரத்தே உறங்கினால் நூறாண்டு வாழலாம்.
நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான்.
ஆரோக்கியம் இல்லா வாழ்க்கை பாழ்.
