ஈஸி சேர்
"வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்னைக்கு!"
"குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்?" "குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-நான் வயலினிஸ்ட்!!"
"தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே..." 'திரவப்பொருள்!' "அதெப்படி?" கொட்டுமே!"
"மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!" "ஏன் அப்படி சொல்றே?" "மயிலுக்கு தமிழ் தெரியாதே!"
"உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?" "அது 'ஈஸி' சேராச்சே!"
