இலக்கியத்தில் ஓவியம்

bookmark

ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புக்கள் பல சங்கப் பாடல்களிலே காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும், ஓவியம் பற்றிய தகவல்கள் இலக்கியங்களில் உள்ளன.

"ஓவியச் செந்நூலுரைநூற் கிடக்கையும்” என்ற மணிமேகலை வரிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் "அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென” ஒன்றைக்கூறியிருக்கின்றனர்.

ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானது. படம் என்னும் பெயர் இக்காரணத்தினாலேயே வந்தது என்பர் (படம் - வஸ்திரம்)[இதில் சேர நாட்டு ஒலி பதிவு இல்லை]