இறைமணம் பரப்பிய மறைத்தூதரே

bookmark

இறைமணம் பரப்பிய மறைத்தூதரே
மறைநெறி காத்திட்ட சவேரியாரே

1. வாழ்வெல்லாம் இறைவனைப் புகழ்ந்தவர் நீர்
வழியெல்லாம் அவர் கரம் பிடித்தவர் நீர் (2)
சோதனை வாழ்வினில் வென்றவர் நீர்
சாதனை எங்கும் படைத்தவர் நீர்
எங்கள் நல்போதகரே வந்தோம் உம் பாதம் தன்னில்

2. அன்பாய் உன் புகழ்தனைப் பாடிடுவோம்
முத்துக்குளித்துறையின் முனிவரே நீர்
தத்துவம் பல கற்ற கலைஞனும் நீர் (2)
ஆன்ம தாகத்தால் அலைந்தவர் நீர்
அணையாத ஜோதியாய் நிலைத்தவர் நீர் - எங்கள் ...