இறுதிச் சடங்கு

bookmark

"மூத்த 'குடி' மக்களுக்குப் புதுசா சலுகை அறிவிச்சிருக்காங்க!"

"என்னது?"

"பார்லே அவங்களுக்குச் சோடாவும் ஊறுகாயும் இலவசமாம்!"

நர்ஸ்: ஏன் டாக்டர் அந்த பேஷண்டுக்கு ஆபரேஷனைத் தள்ளி வச்சிட்டீங்க..."

டாக்டர்: குவைத்திலே இருக்கிற அவரோட ஒரே மகன் இறுதிச் சடங்குக்கு வந்த சேர வேண்டாமா?"

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!

"மாஜி மந்திரிக்கு வச்ச சிலை ரொம்ப அநியாயம்."

"எப்படிச் சொல்றே?"

"சூட்கேசை கையிலே வாங்குற மாதிரியில்லே வச்சிருக்காங்க!"

இன்ஸ்பெக்டர்: உன் மனைவியை உடனடியாகக் கண்டுபிடிச்சி உன்கிட்டே ஒப்படைக்கிறது எங்க பொறுப்பு....

வந்தவர்: ஒண்ணும் அவசரமில்லே... ரொம்பவும் சிரமப்பட வேண்டாம்.