இரக்கத்தை இறைவா பொழிந்தருளும்

bookmark

இரக்கத்தை இறைவா பொழிந்தருளும்
உயிர்கள் அனைத்தையும் காத்தருளும்

1. கொடியோரின கூட்டத்தில் கோமகனே - உனக்கு
குவலயமதில் வாழ வழியில்லையோ
வாழ்வினை இழக்க துணித்தனையோ - எனக்காய்

2. பாரமான சிலுவையினை - உம்
தோள்மேலே சுமக்க ஏற்றாயோ
சிலுவை பயணத்தை தொடர்ந்தாயோ - நீர்

3. முதலாம் முறையாய் நீர் விழுந்தீர்
உடுதலைப் பணியின் வழி தொடர்ந்தீர்
வீதியில் விழுந்தாய் விழுந்தனையோ - வாழ்வின்

4. துயரத்தின் பிடியில் துடித்தீரே - உமக்கு
துணையாய் அன்னையும் வருவாளே
பாசத்தின் நிலையை புரிந்தோமே - அன்னை

5. மறுத்திட முடியா சீமோனும் - உம்
சிலுவையை சுமக்க உதவினாரே
துன்பத்தில் துணையாய் இருந்திடவே - பிறர்

6. செந்நீரில் குளித்தது உம் திருமுகமே
வெரோணிக்கா துகிலால் துடைத்தாளோ
மாறாத திருமுகம் பதித்தாயே - நெஞ்சில்

7. மனிதத்தின் கவலை சூழ்ந்ததனால் நீர்
இரண்டாம் முறையாய் விழுந்தீரே
நம்பிக்கை துரோகம் செய்தனரே - உமக்கு

8. எருசலேம் பெண்களின் அழுகுரல்கள் - உம்
இதயத்தை அசைத்துப் பார்த்ததுவோ
ஆறுதல் தந்து நடந்தீரே - என்றும்

9. தாங்க முடியா சுமையாலே - நீர்
தள்ளாடி மூன்றாம் முறை விழுந்தீர்
இலக்கினை நீரும் அடைந்தீரே - உம்

10 உடைகளை இழந்து உரிமையைச் கொடுத்து
உறவுக்கு சாட்சியாய் நின்றீரெ
மானத்தை இழந்து மனதில் புகுந்தாய் - உன்

11 கல்வாரி மலையில் கள்வரின் நடுவில்
உன்னையும் சிலுவையில் அறைந்தனரே
மன்னித்து வாழ மொழிந்தீரே - என்றும்

12 அன்பே உயிரென்று சொன்னவரே - இன்று
எனக்காய் உமதுயிர் தந்தாயே
உடலுக்கு உயிராய் வந்து நின்றாய் - எம்

13 உதிரத்தை கொடுத்து அன்னையவள் - இன்று
உயிரற்ற உடலைத் தாங்குகின்றாள்
இதயத்தின் இயக்கம் நின்றதுவே - அன்னை

14 அநீத செயல்கள் அனைத்தையுமே - உம்
கல்லறையோடு புதைத்தாயே
நீதி நேர்மை நிலைத்திடவே - நின்
நனைவுகள் புவியில் நிலைத்தனவே