இதய தீபமே எங்கள் குழந்தை இயேசுவே

bookmark

இதய தீபமே எங்கள் குழந்தை இயேசுவே
எம் இதயம் நிறைந்த நன்றியால் உம்மைப் பாடுவோமே (2)

1. அன்பினுக்காய் அவனியில் வாழ்நது அகிலம் வென்றவரே -எம்
அன்பு வாழ்க்கை அவனியில் சிறக்க ஆலயம் கொண்டவரே (2)
சுகமாக வா என் சுமை நீக்க வா - 2
சுமைதாங்கியே எம் சுமைதாங்கியே

2. ஒளியிழந்து வழிதவறி வாழ்ந்த நாட்கள் உம்
அருளிழந்து உமை மறந்த நாட்களன்றோ (2)
குழந்தை இயேசுவே உம் துணையிருந்தாலே - 2
இருள் நீங்குமே எங்கும் ஒளியாகுமே