ஆற்றுப் படலம் - 19
வெள்ளம் வான வில்லை ஒத்தமை
வானவில்: வெள்ளம்
19.
பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும்,
தேன் அளாவியும், செம் பொன் விராவியும்,
அனை மா மத ஆற்றொடு அளாவியும்,
வான வில்லை நிகர்த்தது - அவ் வாரியே.
அவ் வாரி- அந்த வெள்ளப் பெருக்கு; பூ நிரைத்தும் - பல நிற
மலர்களை வரிசைப்படுத்தியும்; மென் தாது
பொருந்தியும்-மென்மையான மகரந்தப் பொடி பொருத்தப் பெற்றும்;
தேன் அளாவியும்-தேனொடு கலந்தும்; செம்பொன்
விராவியும்-செம்பொன் கலந்தும்; ஆற்றொடு-ஆற்றிலே; ஆனை மா
மதம் அளாவியும்-ஆனைகளின் மிகுந்த மதநீர் கலந்தும்;
வானவில்லை நிகர்த்தது-பலநிறங்கள் கொண்ட வானவிலை
ஒத்திருந்தது.
பல நிறங்கள் கொண்ட பொருள்கள் ஆற்று வெள்ளத்தில்
கலந்திருந்த காட்சி வானவில்லைக் கண்டதுபோல் இருந்தது கருத்து. 8
