ஆந்தை

ஆந்தை

bookmark

ஆந்தை

ஒரு வருடத்திற்கு குறையாமல் 6,000 எலிகளை உண்ணுகின்றன. 

அதிக சிரமம் இல்லாமல், இந்த பறவைகளால் 2 ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒலிகளைக் கேட்க முடிகிறது.

இதற்கு மூன்று இமைகள் உள்ளன. இமைக்க, தூங்க, கண்களை சுத்தம் செய்ய என்று தனித்தனியே 3 இமைகள் கொண்டுள்ளது.

செவிப்புலன் பூனைகளை விட 4 மடங்கு சிறந்தது.

மற்ற பறவைகள் பறக்கும் போது படபடவென ஓசை எழுப்பும். ஆனால் இவற்றின் இறக்கைகள் மிக மென்மையாக இருப்பதால் பறக்கும்போது ஒலியை எழுப்பாது.

இவை தூரப்பார்வை கொண்டவை. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் ஒளியை கவனித்து வேட்டையாடக் கூடியவை.

தனது இறக்கைகளை பயன்படுத்தி தண்ணீரில் கடினமாக நீந்தக் கூடிய தன்மை கொண்டது.

பனி ஆந்தைகள் 3000 மைல் தூரம் வரை நிற்காமல் பறக்கும் திறமை கொண்டது.

அதன் முட்டை வடிவ கண்கள் பெரிதாக இருப்பதால் மற்ற திசைகளை பார்க்க அதன் மொத்த தலையையும் 270 டிகிரி கோணம் வரை திருப்பி பார்க்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது.

ஒரே இரவில் மூன்று முதல் நான்கு எலிகளை விழுங்கி விடும். சிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் அத்தனையும் உறிஞ்சு கொண்டு எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்ற கழிவுகளை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடுகின்றன.