ஆசிரமம்!

bookmark

1. "இளவரசி நமது படை வீரனைக் காதலிக்கிறாள் என்று சொன்னதும் எதற்காகச் சிரிக்கிறீர்கள் மன்னா...?" 

"நமது படையில் ஏது அமைச்சரே வீரன்?"

2. "டாக்டரான என்னாலேயே முடியலை... ஒரு மாசமா கோமா நிலையில இருந்த உங்க குருஜிக்கு எப்படி நினைவு திரும்ப வச்சீங்க?"

"உங்களைப் பார்க்க ஒரு நடிகை வந்திருக்காங்கன்னு சொன்னேன் டாக்டர்!"


3. "என் மனைவியும் வேலைக்காரியும் ரோட்ல கட்டிப்புரண்டு சண்டை போடுறாங்க..."

"அதுல யாரு உங்க மனைவி..?"

"அதைத் தெரிஞ்சுக்கறதுக்குத் தான் ரெண்டு பேருக்கும் சண்டை நடக்குது!"

4. "தலைவருக்கு பதவி ஆசை போய், பெண் ஆசை வந்திருச்சுன்னு எப்படிச் சொல்றே...?"

"கட்சி ஆபீஸை ஆசிரமமா மாத்தப் போறேன்ங்கறாரே...!"

5. "நம்ம டைரக்டர் ஏன் இப்படிச் சோர்ந்து போயிருக்கார்?"

"கதையே இல்லாம அவர் எடுத்த படத்தோட கதை என்னுதுன்னு ஒருத்தர் கேஸ் போட்டு இருக்காராம்!"