அவசரம் (பதற்றம்)
அ) பதறிய காரியம் சிதறிப் போகும் (ஆ) பதறாத காரியம் சிதறாது.
மெதுவாக அவசரப்படு. அவசரம் அடிசறுக்கி விழும்.
(அ) அவசரத்தில் உள்ளது தவறு (ஆ) அவசரப்பட்டால் தவறு நிச்சயம்.
(அ) வேகம் விவேகம் அல்ல (ஆ) அவசரப்பட்டு அடியெடுத்து வைப்பது ஆகாது.
(அ) அவசரக் கோலம் அள்ளித் தௌ¤த்தல் (ஆ) அரைகுறை வேலையின் அன்னை அவசரம்.
அவசரக் கல்யாணம் நிரந்தர மனவருத்தம்.
ஈ அடிப்பதைத் தவிர எதிலும் அவசரம் கூடாது.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.
