அழகு முத்துக்கோன் (1728–1757)

bookmark

வீர அழகுமுத்துக்கோன் (1728-1757) ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் அரசருக்கு நண்பராக இருந்தவர். அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்ததாலும் மருதநாயகம் யூசுப்கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 6 படைத்தளபதிகளும் மற்றும் 248 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர். பீரங்கி முன் நின்று சாகும் தறுவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைக் கொண்டு இவர் யாதவர் குலத்தவர் என்பது நிரூபிக்கப் பட்டு உள்ளது.

இவர் கோனார் குலத்தில் சேர்வைக்காரர் என்ற பட்டம் பெற்றவர் . இன்றும் வாழ்ந்து வரும் இவரது வாரிசுகள் அனைவரும் யாதவர்களே ஆவர். இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.