அறிவுரை
நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது.
(அ) செய்கை வரும் முன்னே அறிவுரை வரும் பின்னே (ஆ) செய்து முடித்தபின் சேர்ந்திடும் அறிவுரை.
விவேகம் எச்சரிக்கும் அவிவேகம் செயல்படும் அறிவுரை நல்லதானால் யாரானாலும் கொள்.
உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே.
அளவுக்கு மீறி அறிவுரை கேட்டால் அதிகக் குழப்பம் அடைந்திட வேண்டும்.
அறிவுரை போல இலவசம் வேறெது? அறிவுரை கொடுப்பதினும் கேட்பதே நல்லது.
நல்ல அறிவுரை கொடுப்பது எளிது அதன்படி நடப்பது அரிது.
அறிவுரை தேவைப்படும் பொழுதுதான் அலட்சியம் கண்ணை மறைக்கும்.
முற்றிய பிறகு பெற்ற அறிவுரை தந்திடும் வேதனை.
நல்ல அறிவுரைக்கு நாடிடு கிழவனை.
உன்னை நேசிப்பவனின் அறிவுரையை தற்போது கொள்ளாவிடினும் பிற்போது கொள்ள அதை எழுதி வைத்திடு.
போருக்குப் போவென்றும் திருமணம் புரியென்றும் யாருக்கும் அறிவுரை கூறாதே கும்பலில் அறிவுரை ஒருபோதும் கூறாதே
