அனிதா ரத்னம்

அனிதா ரத்னம்

bookmark

வாழ்க்கை வரலாறு

அனிதா ரத்னம் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி, நியோ பாரத் நாட்டியம் எனப் பெயரிட்டுள்ளார். இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(2000), பாய்ஸ்(2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.