அதிர்ச்சி வைத்தியம்

bookmark

1. "எதுக்கு பையனை போட்டு அடிக்கறீங்க! 

"லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வரச்சொன்னா, போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்!"

வி.ஜி.கிருஷ்ணன்

2. "எதுக்கு அந்த பேஷன்டோட கட்டிலுக்குக் கீழே பட்டாசைக் கொளுத்திப் போடறீங்க..?"

"நீங்கதானே டாக்டர், அவருக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கச் சொன்னீங்க..!"

வி.சாரதி டேச்சு

3. "டாக்டர் நூறு வயசு வரைக்கும் வாழறதுக்கு என்ன பண்ணணும்..?"

"இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..!"

பி.கோபி

4. "எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்..."

"அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"

"ஆமா! உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!"

சி.பி.செந்தில்குமார்