அதியமான்

bookmark


அதியமான்கள் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் ஆவர். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது.

சங்கப் பாடல்களில்:

சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு கொடுத்தான்.

கல்வெட்டுக்கள்:

இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது இக் கல்வெட்டு அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிடுகிறது. "ஸதிய" என்பது அதியர் என்னும் சொல்லின் வடமொழி ஒலி. "புதோ" என்பது "புத்திரன்" என்னும் வடசொல்லின் சிதைவு. "மகன்" என்னும் தமிழ்ச்சொல்லின் மொழிபெயர்ப்பு.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.