அசல் ஆங்கிலப் பெயர்

bookmark

மனைவி கணவனிடம்:- உங்க இஷ்டத்துக்கு காட்டுக் கூச்சல் போடுறீங்களே! என்ன சட்டசபைன்னு நினைப்பா? இப்ப நீங்க இருக்கிறது நம்ம வீடு. ஞாபகம் வச்சிக்கோங்க..."

"என்னடி நீயும், ரவியும் பேசிக்கறது இல்லையே. உங்களுக்குள்ளே சண்டையா?"

அதெல்லாம் ஒன்னுமில்லேடீ, எங்களுக்கு கல்யாணம் நிச்சயமாயிடிச்சு."

"அந்த டைரக்டர் என்ன புத்தகம் வாங்கிட்டுப் போறாரு?"

"தமிழ்ப் படங்களுக்குப் பெயர் சூட்ட 1,000 அசல் ஆங்கிலப் பெயர்' என்ற புத்தகம்."

"கேடி கோபால் சைக்கிள் திருடுறதை அடியோடு நிறுத்திட்டான்."

"திருந்திட்டானா?"

"இல்லே... கட்டுப்படியாகல்லியாம். பைக், கார் திருட ஆரம்பிச்சிட்டான்!"

"வக்கீலுக்குப் பொண்ணைக் கொடுத்தீங்களே... இப்ப எப்படியிருக்கிறார்?" 

"என் பொண்ணோட பங்கை இப்பவே பிரிச்சுக் கொடுங்கன்னு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்."