அகலிகைப் படலம் - 538
கங்கையின் வேறு பெயர்கட்குக் காரணம்
538.
‘சகரர்தம்பொருட்டு அருந் தவம்
பெரும் பகல் தள்ளி.
பகிரதன் கொணர்ந்திடுதலால்.
“பகிரதி” ஆகி.
மகிதலத்திடைச் சன்னுவின்
செவி வழி வரலால்.
நிகர் இல். “சானவி” எனப் பெயர்
படைத்தது. இந் நீத்தம்.
பகல் - (நாள்) - ஆகு பெயர்.
கங்கை நதி பகீரதன் கொண்டு வந்ததால் ‘பாசீரதி’ என்னும்
பெயரைப் பெற்றது; பூவுலகிலே சன்னுவின் காது வழியாக
வெளிப்பட்டதால் ‘சானவி’ என்னும் பெயரை அடைந்தது என்பது. 5-29
