அகலிகைப் படலம் - 536
பகீரதன் அயோத்திக்கு மீளுதல்
536.
‘நிரையம் உற்று உழல் சகரர்கள்
நெடுங் கதி செல்ல.
விரை மலர் பொழிந்து ஆர்த்தன.
விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம்
முறை முறை முழங்க.
அரைசன் அப்பொழுது. அணி மதில்
அயோத்தி மீண்டு அடைந்தான்.
முறை முறை - அடுக்கு மிகுதிப் பொருள் பற்றியது.
நரகத்திற் புகுந்த சகரர் நற்கதி உற்றனர்;விண்ணவர் மகிழ்ந்து
மலர் சொரிந்தனர்; பல்லியங்கள் ஆர்த்தன; பகீரதனும் அயோத்தி
அடைந்தான் என்பது. 5-27
