அகலிகைப் படலம் - 532
கங்கைவெள்ளத்தைச் சிவபிரான் சடையினில் கரத்தல்
532.
‘உந்தி அம்புயத்து உதித்தவன்
உறைதரும் உலகும்.
இந்திராதியர் உலகமும்.
நடுக்குற இரைத்து.
வந்து தோன்றினள் வர நதி;
மலைமகள் கொழுநன்
சிந்திடாது. ஒரு சடையினில்
கரந்தனன் சேர.
அம்புயம்- நீரில் பிறப்பது; உந்தி அம்புயத்து உதித்தவன் -
பிரமன்.
கங்கா நதி சத்திய லோகமும். சொர்க்கலோகமும் நடுங்கும்படி
ஆரவாரித்துக்கொண்டு மண்ணுலகிற்கு வந்தது; அதனைச் சிவன்
தனது சடையில் சிறிதும் சிதறாமல் தாங்கினான் என்பது. 5-23
