அகலிகைப் படலம் - 531

bookmark

பகீரதன் புரிந்த தவங்களின் சிறப்பு

531.    

‘பெருகும் நீரொடு. பூதியும்.
   வாயுவும். பிறங்கு
சருகும். வெங் கதிர் ஒளியையும்.
   துய்த்து. மற்று எதையும்
பருகல் இன்றியே. முப்பதி
   னாயிரம் பருவம்.
உருகு காதலின் மன்னவன்
   அருந் தவம் உழந்தான்.
 
பகீரதனின்    தவச்  சிறப்பு. சொல்லப்பெறுகிறது. அவன் பிரமனைக்
குறித்துப்  பதினாயிரமும்.  கங்கையைக்   குறித்து. ஏழாயிரத்தைந்நூறும்.
சிவனை  நோக்கிப்   பன்னீராயிரத்து   ஐந்நூறும்  ஆக  முப்பதாயிரம்
ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான் என்பது.

அவன்     சருகு. சாம்பல். நீர்.  காற்று.  வெயில்  ஆகியவற்றையே
உண்டும்.  இறுதியில் அவ்  வெயிலையும்  நுகராமலும்  தவம் செய்தான்
என்றார்.                                                5-22