அகலிகைப் படலம் - 530

bookmark

530.    

‘எதிர்ந்து. “நின் நினைவு என்?” என.
   இறைஞ்சி. “எம் பெரும!
அதிர்ந்து. கங்கை ஈது அறைந்தனள்”
   என்றலும். “அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்”
   என்று ஏகிய பின்றை.
முதிர்ந்த மா தவம் இரண்டரை
   ஆயிரம் முடித்தான்.
 
பிதிர்ந்திடாவகை- கங்கை நீர் சிந்தாதபடி;  முதிர்ந்த மாதவம் -
சிறந்த பெருந்தவம்.

பகீரதன்     முன்  எழுந்தருளிய சிவன் கங்கையைத் தாங்குவதாகப்
பகீரதனுக்கு   உறுதி   தந்தான்  என்பதும்.   மீண்டும்   அவ்  வரசன்
கங்கையை

நோக்கித்   தவமிருந்து  தனது   கருத்தை நிறைவு செய்தான் என்பதும்
இதிற் சொல்லப்பெறுகின்றன.                                5-21