அகலிகைப் படலம் - 529
பகீரதன் சிவபிரானையும் கங்கையையும் குறித்து
மீண்டும் நோற்றல் (529-530)
529.
‘கரந்தை. மத்தமோடு. எருக்குஅலர்.
கூவிளை. கடுக்கை.
நிரந்த பொற் சடை நின்மலக்
கொழுந்தினை நினையா.
அரந்தை உற்றவன். இரண்டரை
ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர.
வரை உறை புனிதன்.
கரந்தை - ஒரு பூண்டு; கூவிளை - (இலை) - முதலாகு பெயர்
(வில்வம்); மத்தம் - உன்மத்தம். ஊமத்தம்: முதற்குறை: வரைமகள்
புனிதன்- பார்வதி கொழுநனான சிவன். கரந்தை. ஊமத்தம். எருக்கு.
வில்வம். கொன்றை ஆகியன சிவனுக்கு உரியவை.
கங்காதேவியின் மொழியைக் கேட்டுப் பகீரதன் மீண்டும் சிவனை
நோக்கிக் தவம் புரிந்தான் என்பதும் சிவன் அவன்முன் தோன்றிக்
காட்சி தந்தான் என்பதும் இதிற் சொல்லப்பெறுகின்றன. 5-20
